» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதரர் மகள் கருணா சுக்லா விலகினார்.

ஞாயிறு 27, அக்டோபர் 2013 2:19:02 PM (IST)

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக மூத்த தலைவர் வாஜ்பாயின் சகோதரரின் மகள் கருணா சுக்லா பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் காங்கிரசில் சேரவிருக்கிறாராம்.

பாஜக மூத்த தலைவர் வாஜ்பாயின் சகோதரரின் மகள் கருணா சுக்லா(61).அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் பாஜக மஹிலா மோர்ச்சாவின் தேசிய துணை தலைவராகவும் இருந்தவர். சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிற நிலையில் அவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகுவதாக அவர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து பாஜகவின் துணை தலைவராக இருந்த அவர் கூறுகையில், கட்சியின் முக்கிய விவகாரங்கள் குறித்து யாரும் என்னிடம் பேசுவதில்லை. பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூட என்னிடம் கட்சி விவகாரங்கள் பற்றி பேசுவதில்லை. நான் சத்தீஸ்கர் மாநிலம் பெல்தாரா தொகுதியில் போட்டியிட விரும்பினேன்.ஆனால் என்னை கோர்பா தொகுயில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள். நான் கட்சிக்காக 32 ஆண்டுகள் உழைத்து பல்வேறு பதவிகள் வகித்துள்ளேன். ஆனால் என்னால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலைமை வந்துள்ளதை நான் உணர்ந்துவிட்டேன்.

மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பேசுவதை கட்சி கேட்பதில்லை சிலர் தங்கள் கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இஷ்டம் போல் செயல்படுகின்றனர் என்றார். இந்நிலையில் அவர் காங்கிரஸில் சேரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory