» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மீனவர்கள் கொன்ற இத்தாலி வீரர்களை விசாரிக்க தனிப்படை: கப்பலில் சோதனையிட உத்தரவு!!

புதன் 22, பிப்ரவரி 2012 5:29:07 PM (IST)

குமரி மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டு கொன்ற சம்பவம் தொடர்பாக விசாரிக்க கொச்சி போலீஸ் கமிஷனர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

குமரி மீனவர்கள் 2 பேர் இத்தாலி கடற்படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர் பாக 2 கடற்படை வீரர் களை கேரள போலீசார் கைது செய்தனர். அவர் களை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாளை (23ம்தேதி) கருணாகபள்ளி நீதிமன்றத்தில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதற்கிடையில், மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகளை கைப்பற்ற கொல்லம் 2ம்வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கப்பலில் சோதனையிட்டு துப்பாக்கிகளை கைப்பற்ற வாரன்ட்டை யும், மாஜிஸ்திரேட் அனில்குமார் பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த கொச்சி போலீஸ் கமிஷனர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கொல்லம் போலீஸ் கமிஷனர் சாம் கிறிஸ்டி டேனியல் மற்றும் குற்றபிரிவு போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்று உள் ளனர். கப்பலில் சோதனை நடத்தி துப்பாக்கிகளை கைப்பற்ற கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தனிப்படையினர் கப்பலில் சோதனை நடத்த உள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த கொச்சி போலீஸ் கமிஷனர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கொல்லம் போலீஸ் கமிஷனர் சாம் கிறிஸ்டி டேனியல் மற்றும் குற்றபிரிவு போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்று உள் ளனர். கப்பலில் சோதனை நடத்தி துப்பாக்கிகளை கைப்பற்ற கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தனிப்படையினர் கப்பலில் சோதனை நடத்த உள்ளனர்.


மக்கள் கருத்து

நான்வியாழன் 23, பிப்ரவரி 2012 - 10:35:47 AM | Posted IP 122.1*****

எங்கயோ இருக்கும் இத்தாலி நாட்டு கொலைகாரங்களை புடிச்சிட்டீங்க...... பக்கத்துல இருக்குற கொடூர கொலைகாரன் ராஜபக்சே -வ எப்போ புடிக்க போறீங்க....... புடிச்ச நம்ம ஊருக்கு( tuty ) ஒரு ரவுண்டு கொண்டு வாங்க.... அடிச்சி துவைச்சி மீன்பாடி வண்டில போட்டு ராமேஸ்வரம் அனுபிவிடுறோம்....

தமிழ்புதன் 22, பிப்ரவரி 2012 - 06:51:09 PM | Posted IP 122.1*****

100 தமிழன் ஐ சுட்டவன் .. இன்னும் தமிழனை சுடுறான் ... அதை என்ன விசாரணை கமிஷன் கேக்கும? தமிழா நியும் ஆயுதம் எடு ... கப்பல் படையை நம்பாத .. அது மீன் பிடிக்கடும் ..

balaபுதன் 22, பிப்ரவரி 2012 - 06:35:06 PM | Posted IP 117.2*****

thambi kerala vil nadantha police singalan illa americana irunthalum pidikkum. thamilnadu area nadantha pidikkathu ena mathiya manila arasukalukku malayali uieru uieru namma uireru maieru

அறிவாளிபுதன் 22, பிப்ரவரி 2012 - 06:06:11 PM | Posted IP 124.1*****

இதே மாதிரி சிங்களன் கப்பலையும் பிடித்து சோதனை போட்டு ஏன் சுட்டாய் என கேஸ் போட்டு கோர்ட்டில் நிறுத்தாதன் மர்மம் என்ன? அப்படி சிங்களனை பிடித்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தால் மீதியை நாங்கள் பார்த்துக் கொள்ள மாட்டோமா?

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory