» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நெதன்யாகுவிடம் பதக்கம் பெறுவது கௌரவமல்ல : பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:17:48 PM (IST)

இஸ்ரேலுக்கு இந்தியாவின் அபரிமிதமான ஆதரவு இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு பேசியுள்ளதற்கு, பாரதப் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், இஸ்ரேலுக்கு அமெரிக்காவைத் தவிர வேறு எந்தச் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "இந்தியா போன்ற சில நண்பர்களும் எங்களுக்கு உண்டு. அங்கு 140 கோடி மக்கள் உள்ளனர். அங்கே இஸ்ரேலுக்கு அபரிமிதமான ஆதரவு உண்டு. முகநூல் (Facebook) தளத்தில் கூட இந்தியாவில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு தளம் உள்ளது. அதேபோல, வேறு இடங்களிலும் இருக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்துக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான பதிவில் கூறியிருப்பதாவது: "அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறுவது தவறு என்று நிரூபிக்க, இந்தியாவில் இஸ்ரேலுக்கு மகத்தான ஆதரவு உள்ளதாகப் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
நெதன்யாகு சொல்வது முற்றிலும் தவறானது. மோடி - அதானி கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளது என்பதிலும், நரேந்திர மோடி கண்மூடித்தனமாக அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதிலும் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால், காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை லட்சக்கணக்கான இந்திய மக்கள் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். இத்தாக்குதலில் குழந்தைகளும் தப்பவில்லை.
பாலஸ்தீன மக்கள் வற்புறுத்தி வெளியேற்றப்படுவதையும், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தும் மோசமான ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய மக்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை; தொடர்ந்து கண்டித்தே வருகின்றனர். இவை அனைத்தும் இஸ்ரேல் மனிதகுலத்தின் மீது நடத்திய நேரடித் தாக்குதல்களாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில், "உலக குரு எனத் தன்னைத் தானே சுய பிரகடனம் செய்துகொண்டு விருதுகளுக்கு ஆசைப்படும் ஒருவர், இஸ்ரேலின் இத்தகைய கொடூரமான நடவடிக்கைகள் குறித்துக் கல் நெஞ்சத்துடன் மௌனம் காப்பது, இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்திற்கும் விழுமியங்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச அரங்கில் நெதன்யாகு முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பதக்கம் பெறுவது கௌரவமல்ல. குறிப்பாக, பிரதமர் மோடியின் வெள்ளை மாளிகை நண்பரே நெதன்யாகு மீது ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது" என ஜெய்ராம் ரமேஷ் மிகக் கடுமையாகப் பிரதமர் மோடியைச் சாடியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவு இனி எளிது: புதிய அம்சங்களுடன் பீட்டா பதிப்பு அறிமுகம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:31:47 AM (IST)

தேசக் கட்டமைப்பிற்கு வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி புகழஅஞ்சலி!
புதன் 15, ஜூலை 2026 4:47:47 PM (IST)

திருப்பதியில் முதியோருக்கு 30 நிமிடங்களில் இலவச விஐபி தரிசனம்: புதிய திட்டம் தொடக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:38:48 PM (IST)

தெலுங்கானாவில் சிறுமி உட்பட 6 பேர் கொலை வழக்கு: போக்சோ குற்றவாளி தற்கொலை!
செவ்வாய் 14, ஜூலை 2026 11:32:49 AM (IST)









இப்படிக்குJul 6, 2026 - 06:12:43 PM | Posted IP 162.1*****