» செய்திகள் » இந்தியா

என்னை அடித்து கொல்லுங்கள்: புனேயில் 10 பேரை கொன்ற அரசு டிரைவர் கதறல் !!

வெள்ளி 27, ஜனவரி 2012 10:58:10 AM (IST)

என்னை அடித்து கொல்லுங்கள் என புனேயில் நேற்று முன்தினம் தாறுமாறாக பஸ்சை ஓட்டி 10 பேரை கொன்ற அரசு டிரைவர் சந்தோஷ் மானே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா போக்குவரத்து கழக டிரைவர் சந்தோஷ் மானே, புனேயில் நேற்று முன்தினம் தாறுமாறாக பஸ்சை ஓட்டிச் சென்று 10 பேரை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சை பைக்கில் விரட்டிச் சென்று டிரைவர் சந்தோசை மடக்கியவர் புனே கல்லூரியின் 3ம் ஆண்டு மாணவர் ஷரிப் இப்ராகிம் குட்டி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து இப்ராகிம் குட்டி கூறியதாவது: பர்கர் கிங் பகுதியில் ஒரு பெண் மீது பஸ் மோதி தாறுமாறாக சென்றது. பஸ் மீது போலீசார் 3 முறை சுட்டனர். ஆனாலும், வேகத்தை சந்தோஷ் குறைக்கவில்லை. 80 கிமீ வேகத்தில் பஸ் சென்றது. நான் பைக்கில் பின் தொடர்ந்தேன். எதிரே பைக்கில் வந்த ஒருவர் மீது பஸ் பயங்கரமாக மோதி சென்றது. 

பின் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண் மீது பஸ் மோதியது. ஒரு கிலோ மீட்டர் தூரம் அந்த பெண் இழுத்துச் செல்லப்பட்டார். எதிரே வந்த பல வாகனங்கள் மீது பஸ் மோதியது. பால் கேட் பகுதியில் இருந்து நிலையம் டாக்கீஸ் வரை பஸ்சை பைக்கில் விரட்டினேன். கசேவாடி பகுதியில் குழந்தையுடன் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். பஸ்சை முந்திக் கொண்டு அந்த நபரை காப்பாற்றினேன். 

வேகமாக வந்த பஸ் என் பைக்கை உரசிக் கொண்டு சென்றது. மயிரிழையில் உயிர் தப்பினேன். நிலையம் டாக்கீஸ் பகுதியில் மூன்று வாகனங்கள், இரண்டு ரிக்ஷாக்கள் மீது மோதி பஸ் நின்றது. ஜன்னல் வழியாக ஏறி பஸ்சுக்குள் நுழைந்து டிரைவரை பிடித்தேன். அவர் பஸ்சை மீண்டும் ஓட்ட முயன்றார். ஆனால் நான் விடவில்லை. அவரிடம் மல்லு கட்டினேன். 

அதற்குள் பாபு லோங்கர் என்ற போலீஸ்காரர் பஸ்சில் நுழைந்து டிரைவரை பிடித்தார். இருவரும் சேர்ந்து அவரை பஸ்சில் இருந்து வெளியே இழுத்தோம். அதன்பின் மக்கள் சூழ்ந்து கொண்டு டிரைவரை தாக்கினர். அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. நன்றாக அடியுங்கள், என்னை கொல்லுங்கள் என ஆவேசமாக கதறினார். இவ்வாறு இப்ராகிம் குட்டி கூறினார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory