» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை: அனில் தகவல் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:30:14 AM (IST)
இந்தியா உற்பத்தி துறையில் முன்னேறுவதை எதிர்க்கும் சக்திகளை தடுத்துப் போராட வேண்டும் என்று வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: "இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை. ஆனால், உள்நாட்டு உற்பத்தி மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது உலகின் பிற பகுதிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தியா உற்பத்தி துறையில் முன்னேறுவதை எதிர்க்கும் சக்திகளை தடுத்துப் போராட வேண்டும். ஒரு காலத்தில் உணவுக்காக இறக்குமதியை நம்பியிருந்த நாடு, இன்று அதில் தன்னிறைவு பெற்றுள்ளது. அரசு உருவாக்கிய ஒரு மக்கள் இயக்கத்தால் மட்டுமே இது சாத்தியமானது.இதுபோல இப்போது இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால் பலவீனமான நிலையில் உள்ளது. எனவே, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவுக்குத் தேவையான வளங்களும், திறமையான தொழில் முனைவோர்களும் உள்ளனர். நமக்குத் தேவையானது விரிவான ஆய்வுகள் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:41:44 PM (IST)

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)

காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:38:13 AM (IST)

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)









