» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி : ராகுல் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:27:00 AM (IST)
140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது; கொள்கைகளை தீர்மானிப்பதில் கணிக்க முடியாத தன்மைக்கு பெயர் பெற்ற டிரம்பை கையாள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அமெரிக்கா தன்னை சர்வாதிகாரியாக காட்டிக்கொள்ள இந்தியாவை பயன்படுத்துகிறது. பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது. இந்த வர்த்தகம் மூலம் இந்தியாவையே விற்றுவிட்டீர்கள்.
இந்தியா மீதான வரி 3%லிருந்து தற்போது 18%ஆக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலன்களை நசுக்கும். அதானியின் வழக்கை காட்டி பிரதமர் மோடியின் கழுத்தை அமெரிக்கா நெறித்துவிட்டது. அதனால்தான், பாரதமாதாவை விற்றுள்ளார். AI தொழில்நுட்பத்திற்கு எரிபொருளாக இருக்கும் தரவுகளை, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் இலவசமாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு மோடியின் பாஜக அரசு வழி கொடுத்துள்ளது.
இயந்திரமாக்கப்பட்ட அமெரிக்காவின்|பிரமாண்டமான விவசாயத்துறை, இந்திய விவசாயிகளை அழிக்கப் போகிறது. மோடி உள்பட எந்தவொரு பிரதமரும் இதுபோன்ற ஒப்பந்தத்தில், நெருக்கடி இல்லாமல் கையெழுத்திட மாட்டார்கள் என நம்புகிறேன். கழுத்த நெரிக்கும் நெருக்கடியால் மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்தி போடுவார்கள்.
இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம் அழிக்கப் போகிறது. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!
சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!
சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)

ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வெள்ளி 17, ஜூலை 2026 12:31:26 PM (IST)

நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)








