» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்

வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

காசி தமிழ் சங்கம் என்பது தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பை வலுப்படுத்தும் இந்திய அரசின் ஒரு முயற்சியாகும். இது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரபிரதேச அரசுடன் இணைந்து இந்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2022 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டியில், "தமிழ்நாடு - காசி கலாச்சார தொடர்பை வலுப்படுத்த கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 1400 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 

மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், எழுத்தாளர், தொழில் வல்லுனர்கள், கைவினைஞர்கள், ஆன்மீக அறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory