» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட அரசு உத்தரவு: கர்நாடகத்தில் பரபரப்பு

செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:40:44 PM (IST)



கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகிறனர். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஸ்டூடியோவை உடனடியாக மூட மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

srinivasanOct 9, 2025 - 03:47:00 PM | Posted IP 104.2*****

STAR VIJAY TV SHOULD BE BANNED

srinivasanOct 9, 2025 - 03:46:30 PM | Posted IP 172.7*****

IT SHOULD BE BANNED THROUGH ALL OVER INDIA . IT IS FUCKING PROGRAMME FUCKING PEOPLE.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory