» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜுபின் கார்க் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம்: முதல்வர் அறிவிப்பு!!

சனி 4, அக்டோபர் 2025 12:43:14 PM (IST)



அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக நேரலையில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் மாநிலத்தின் கலாச்சார சின்னமாக இருந்த ஜுபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்க குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் எவரிடமேனும் இருந்தால், அதனை அவர்கள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக பலரும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்கிறார்கள். விசாரணை ஆடைணயத்தின் முன் பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவர்களது கடமை. ஜுபின் கார்க் இறந்தபோது அவருடன் இருந்த அசாம் சிங்கப்பூர் சங்க உறுப்பினர்கள், தாங்களாக முன்வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஜுபின் கார்க்கின் பிரேதச பரிசோதனை அறிக்கையை, அவரது மனைவி கரிமாவிடம் அசாம் அரசு ஒப்படைத்துவிட்டது. குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரிடம் வழங்கப்படும். அவற்றை வெளியிடுவதா வேண்டாமா என்ற முடிவை கரிமாவிடமே விட்டுவிடுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory