» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)
தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரவிஷாவின் இறப்புக்கு 'தேர்ட் பார்ட்டி' எனப்படும், மூன்றாம் தரப்பினருக்கான பிரிவின் கீழ் 80 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரின் மனைவி, மகன் மற்றும் பெற்றோர் அரசிகரேயில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்பட அவரே காரணமாக இருந்துள்ளார். எனவே அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு பெறுவதற்கு உரிமை இல்லை' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயிரிழந்த ரவிஷாவின் குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
விசாரணையின் போது, 'ரவிஷா ஓட்டிச்சென்ற கார் அவருடையது இல்லை. அதை கடனாக வாங்கிச் சென்றார். எனவே, காப்பீட்டு நிறுவனம் இறப்புக்கான இழப்பீடு தொகையை மறுக்கக் கூடாது' என வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 'வேறொருவரின் வாகனத்தை வாங்கி ஓட்டும் போது, அவரும் வாகன உரிமையாளராகவே கருதப்படுகிறார்.
எனவே, வாகன உரிமையாளர் அல்லது வாகனத்தை கடன் வாங்கியவரின் சொந்த அலட்சியத்தால் ஏற்படும் இறப்பு அல்லது காயங்களுக்கு காப்பீடு நிறுவனத்தை பொறுப்பாக்க முடியாது' எனக் கூறி விபத்து இழப்பீடுக்கான தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில், ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மகாதேவன் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இறந்தவர் அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்று போலீசாரின் குற்றப்பத்திரிகை தெளிவாகக் கூறுகிறது.
'எனவே அவரது வாரிசுகள் இழப்பீடு கோர உரிமையற்றவர்கள். காப்பீடு நிறுவனமும் இத்தகைய இறப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. உயர் நீதிமன்ற முடிவில் தலையிடுவதற்கு தகுந்த காரணம் எதுவும் இந்த வழக்கில் இல்லை' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)
