» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எந்த ஒரு மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பு உடன் 35 நிமிடங்கள் வரை தொலைபேசியில் உரையாடினார். அப்போது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்தியா எந்த நாட்டையும் மத்தியஸ்தம் செய்ய அழைக்கவில்லை. அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து விவாதிக்கவில்லை என்று அதிரடியாக கூறினார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக கூறிய நிலையில் அப்படி எதுவும் நீங்கள் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் சண்டையை நிறுத்த நம்மிடம் கெஞ்சியது.
இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால், டொனால்ட் டிரம்போ அமெரிக்கா தலையிட்டு தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறினார். மோதலை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா உடனான வர்த்தகத்தை மறந்துவிட வேண்டும் என்று மிரட்டியதாகவும், இதனால் மோதல் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனை நம் நாடு முற்றிலுமாக மறுத்தது. அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் மோதல் முடிவுக்கு வந்ததாக விளக்கம் அளித்தது. ஆனால் டிரம்ப் கேட்கவில்லை. பாகிஸ்தான் - இந்தியா மோதலை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் இன்று பேசி உள்ளனர். கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டின்போது மோடி - டிரம்ப் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே டிரம்ப் புறப்பட்டு சென்றார். இதனால் இருவரும் இன்று தொலைபேசியில் பேசினர். சுமார் 35 நிமிடங்கள் இருவரும் உரையாடினர்.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்னொரு நாட்டை மத்தியஸ்தம் செய்ய ஒருபோதும் அழைத்தது இல்லை. இனியும் அழைக்கமாட்டோம். என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வதோதராவில் பழமை வாய்ந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: 13 பேர் பலி
வியாழன் 10, ஜூலை 2025 8:02:50 AM (IST)

நிலச்சரிவில் வீடுகள் தரைமட்டம்: 67 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
புதன் 9, ஜூலை 2025 5:51:49 PM (IST)

ஆறாம் வகுப்பு மாணவர்களில் 47% பேருக்கு வாய்ப்பாடு தெரியவில்லை : ஆய்வில் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:19:52 AM (IST)

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)
