» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 7-வது மாடியில் இருந்து குதித்த தந்தை, 2 குழந்தைகள் பலி!

செவ்வாய் 10, ஜூன் 2025 4:10:02 PM (IST)



டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 7வது மாடியில் இருந்து குதித்த தந்தை மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 

டெல்லி துவாரகா செக்டார் 13 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் 7-வது மாடி முழுவதும் தீ வேகமாகப் பரவிய நிலையில், அப்பகுதியில் சிக்கிய தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் தப்பிக்க கீழே குதித்துள்ளனர். 

அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், ஏற்கெனவே மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் 7-வது மாடியில் குடியிருக்கும் யாஷ் யாதவ் (35 ) மற்றும் அவரின் 10 வயது மகன் மற்றும் மகள் என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிகளவிலான புகைமூட்டம் எழுந்துள்ளதால், அப்பகுதியில் இருந்து மக்களை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory