» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகம் உட்பட நாடு முழுதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வியாழன் 22, மே 2025 4:03:10 PM (IST)

தமிழகத்தில் 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுதும் 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்து வைத்தார். 

அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையங்கள் சிட்டி சென்ட்டர் போன்று ரூப் பிளாஸா, புட் கோர்ட், சிறுவர் விளையாட்டுப் பகுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தனித்தனி உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாசல்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தப்பகுதி, மின்தூக்கி, மின்னுயர்த்தி, எக்சிகியூட்டிவ் லான்ஜ், காத்திருப்புப் பகுதி, டிராவலேட்டர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தோழமையான வசதிகள்.

இந்நிலையங்கள் ஒருங்கிணைந்த மல்ட்டி மோடல் இணைப்புகளுடன் அந்தந்தப் பகுதிகளுக்கு பொருளாதார மேம்பாட்டு மையங்களாகத் திகழும். சுற்றுச்சூழல் அழகை தக்கவைக்க மின் சிக்கனம் மற்றும் பசுமைப் பாதுகாப்புத் திட்டங்களுடன் கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அம்ரித் பாரத் ரயில் நிலையமும் திறக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory