» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பங்கேற்ற நிலையில், ரஜௌரியில் பாகிஸ்தான் அத்துமீறி இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் நிர்வாக பணிகளில் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று மாவட்டம் முழுவதும் துணை முதல்வருடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், எனது தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்தநிலையில் ரஜௌரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி ராஜ் குமார் தாப்பா வீடு தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பால் தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)








