» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தானிற்கு நிதி வழங்குவதில் ஆழமான யோசனை தேவை : ஐஎம்எஃப்-க்கு இந்தியா வலியுறுத்தல்!
வெள்ளி 9, மே 2025 3:36:32 PM (IST)
தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை வழங்குவது குறித்து ஐஎம்எஃப் அமைப்பு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ள நிலையில், இதனை இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக வழங்கப்பட்ட நிதி எதற்காக பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டதா,அல்லது வேறு எதற்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் ஐஎம்எஃப் அமைப்புக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனர், இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைப்பார் என்றும் தெரிவித்தார். இதனிடையே இந்தியாவின் தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் எனவே நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்க வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், உலக வங்கி, ஆசிய வங்கி, சர்வதேச நிதியம் மூலம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு கிடைக்கும் கடனை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாடு, கடனுதவி கிடைக்காவிடில் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)








