» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போதைப்பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது
சனி 19, ஏப்ரல் 2025 5:36:38 PM (IST)

போதைப் பொருள் வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கேரள போலீசார் கைது செய்தனர்.
கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையின்போது சாக்கோ அங்கிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சி பரவியதை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று ஆஜரான அவரிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய பின் போலீசார் கைது செய்தனர்
முன்னதாக நோட்டீஸ் வழங்க நடிகரின் திருச்சூர் வீட்டுக்குப் போலீஸார் சென்ற போது, அவர் வீட்டில் இல்லாததால் அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் சாக்கோ, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலில் நடந்த சோதனையின் போது, நடிகர் தப்பிச் சென்றது ஏன் என்பது குறித்து கேட்டறிவதே விசாரணையின் நோக்கம் என்று போலீஸார் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், ஷைன் டாம் சாக்கோ மீது ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து ‘சூத்ரவாக்யம்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ‘அம்மா’ ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. வின்சியின் புகார் குறித்து விளக்கம் அளிக்க ஷான் டைம் சாக்கோவுக்கு அந்த குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)








