» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)



குஜராத்தில் அரபிக் கடலில் கொட்டப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம், இந்திய கடல் எல்லைக் கோடு அருகே போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டன.

அப்போது அருகில் வந்த கடலோர காவல்படை கப்பலைக் கண்டதும் படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 300 கிலோ போதைப்பொருள்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்தது.

அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் விசாரணைக்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory