» செய்திகள் » இந்தியா

Share

தீவிரவாதிகள் தாக்குதல் சதித்திட்டம்: மும்பை, கொல்கத்தாவில் உஷார் நிலை!

செவ்வாய் 9, மார்ச் 2010 11:42:29 AM (IST)

மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்நகரங்களில் உஷார் நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த வாரம் இந்திய முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சல்மான் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் சல்மானிடம் நடத்திய விசாரணையில் மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து மத்திய அரசிடமிருந்து வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மேற்கூறிய 3 நகரங்களிலும் முழு அளவிலான உஷார் நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads