» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு!
திங்கள் 11, நவம்பர் 2024 12:28:03 PM (IST)
உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்? திருச்சி சிவா கேள்வி
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:40:32 PM (IST)

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மான கடிதம் வழங்கிய இண்டியா கூட்டணி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:11:33 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)










