» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது: பேஸ்புக் பதிவால் போலீசில் சிக்கினர்

ஞாயிறு 10, நவம்பர் 2024 8:34:52 PM (IST)

தலைநகர் பெங்களூருவில் கஞ்சா செடியை வளர்த்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா குமாரி, தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். அவ்வகையில் தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் விதவிதமான செடிகளின் வீடியோ மற்றும் படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டார்.

ஊர்மிளா பதிவிட்ட 17 பூந்தொட்டிகளில் 2 தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டிருந்தார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அப்புகைப்படத்தில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் சாகர் மற்றும் ஊர்மிளாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா பயிரிட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இந்த தம்பதியை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory