» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவை வளர்த்து வருகிறது : உதயநிதி ஸ்டாலின்
சனி 2, நவம்பர் 2024 4:03:14 PM (IST)

திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: "திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது, அதனை மாற்றியது நீதிக்கட்சிதான். மாநில மொழிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது திராவிட இயக்கம்தான். சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி எனும் மொழியை தி.மு.க எதிர்க்கவில்லை, இந்தி மொழி திணிப்பையே எதிர்க்கிறோம்.
மொழிப்போர் தியாகிகளை போற்றும் வகையில் தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த பெரியார் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று கூறினார்.
மக்கள் கருத்து
என்னது ?Nov 2, 2024 - 06:18:33 PM | Posted IP 172.7*****
பூசாரியை வீட்டுக்குள்ளே கூட்டிட்டு வந்து பூஜை செய்யற மாதிரியா? அது புழுத்தறிவு
மேலும் தொடரும் செய்திகள்

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)

டெல்லி குண்டுவெடிப்பில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குத் தொடர்பு: முக்கிய தடயங்களைச் சேகரிப்பு
புதன் 12, நவம்பர் 2025 11:14:39 AM (IST)

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடரலாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:02:51 PM (IST)

டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்
செவ்வாய் 11, நவம்பர் 2025 12:07:45 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது!
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:45:24 AM (IST)









மாநில சுயாட்சிNov 3, 2024 - 12:43:51 PM | Posted IP 162.1*****