» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

புதன் 30, அக்டோபர் 2024 12:55:07 PM (IST)

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் பல்வேறு முன்னணி விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த 400-க்கும் அதிகமான விமானங்களுக்கு கடந்த 15 நாட்களில் சமூகவலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தநிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள கோண்டியாவை சேர்ந்த ஜக்தீஷ் உய்கே (35) என்பது தெரியவந்தது.

இவர் விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி பிரதமர் அலுவலகம், ரெயில்வே மந்திரி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அலுவலகம் மிரட்டல் இ-மெயில் அனுப்பி உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஜக்தீஷ் உய்கே பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாகவும், 2021-ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்து உள்ளது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் தலைமறைவாக இருந்த ஜக்தீஷ் உய்கேயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory