» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி
புதன் 2, அக்டோபர் 2024 5:27:58 PM (IST)
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-து நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான காமராஜரின் 50வது நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில், "தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவரான காமராஜரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலிகள். அவரது பணிவு, அர்ப்பணிப்பு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை நாடு முழுவதும் உள்ள புதிய தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது மரபு எப்போதும் நினைவுகூறப்படும், போற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதிவில், "எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய, இந்தியாவின் சிறந்த மகன் காமராஜருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம். தமிழக மக்களால் மதிக்கப்பட்ட அவர், சமூக நீதி, நலனுக்காக வாதிட்டவர். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருதை பெற்றவருமான காமராஜர், மதிய உணவு திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை அறிமுகபடுத்தியதன் மூலம், வசதியில்லாத குழந்தைகளின் இலவசக் கல்விக்கு வழிவகுத்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)
