» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடவுள்தான் டெல்லியைக் காப்பாற்ற வேண்டும்: அதிஷி தேர்வுக்கு ஸ்வாதி மலிவால் எதிர்ப்பு!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:58:40 PM (IST)



டெல்லி முதல் அமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முதல்-அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஜ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. தலைமை செயலகத்துக்கு செல்ல கூடாது. எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். 

நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்களில் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக திடீரென அறிவித்தார். மக்கள் என்னை நேர்மையானவர் என கருதி மீண்டும் வெற்றி பெற வைத்தால் மட்டுமே முதல்-அமைச்சர் நாற்காலியில் அமருவேன் என அவர் சபதமிட்டார். கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதல்-அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் முன்னாள் துணை-முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா, ராகவ் சதா ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.அப்போது முதல்-அமைச்சர் பதவி யாருக்கு கொடுக்கலாம் என விரிவாக ஆலோசித்தனர்.

இது பற்றி கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களையும் கெஜ்ரிவால் தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.இன்று 2-வது கட்டமாக கெஜ்ரிவால் தனது இல்லத்தில் மீண்டும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 57 பேரும் கலந்து கொண்டனர். இதில் முதல்-அமைச்சர் பதவிக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து வரும் அதிஷி பெயரை கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதனை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-அமைச்சராக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால், புதிய முதலமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மலிவால் கூறியிருப்பதாவது: இன்றைய நாள் டெல்லிக்கு மிகவும் சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் டெல்லி முதல்வராக்கப்படுகிறார்.

அதிஷி குடும்பத்தை பொறுத்தவரை அப்சல் ஒரு நிரபராதி. மேலும், அப்சல் குரு மீதானது அரசியல் சதியால் போடப்பட்ட பொய் வழக்கு. அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். கடவுள்தான் டெல்லியை காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

sankarSep 18, 2024 - 09:11:52 AM | Posted IP 162.1*****

actually the AAP is terrerism organised party by Kalistan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory