» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் பாலியல் புகார் எதிரொலி : டான்ஸ் மாஸ்டர் ஜானி தலைமறைவு!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 11:59:43 AM (IST)

பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி தலைமறைவாகி உள்ளார். 

திரையுலகில் பிரபல டான்ஸ் மாஸ்டராக அறியப்படுபவர் ஜானி. முன்னணி திரையுலக நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர். தேசிய விருதையும் வென்றிருந்தவர். 40 வயதான அவர் மீது 21 வயது உதவி நடன இயக்குநர் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாதில் உள்ள ராய்துர்கம் போலீஸ் ஸ்டேஷனில் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு பாய்ந்துள்ளதால் ஜனசேனா கட்சியில் இருந்தும் ஜானி நீக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள தருணத்தில் இருந்து, அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. இது குறித்து துணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கூறி உள்ளதாவது;பெண் அளித்த புகாரை முழுமையாக பதிவு செய்திருக்கிறோம். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள ஜானி தலைமறைவாக உள்ளார். 

சம்பவம் நடைபெற்ற காலத்தில் புகார்தாரரின் வயது 18 வயதை பூர்த்தி அடையவில்லை. எனவே உரிய விசாரணையை தொடர்ந்து ஜானி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவாகுமா, இல்லையா என்பது தெரிய வரும். தகுந்த நடவடிக்கை கட்டாயம் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே பாலியல் புகார் எதிரொலியாக நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory