» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழில் அதிபரை மிரட்டி ரூ.1½ கோடி பறித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 4 பேர் கைது!

வியாழன் 12, செப்டம்பர் 2024 5:48:26 PM (IST)

பெங்களூருவில்  தொழில் அதிபரை மிரட்டி ரூ.1½ கோடி பறித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெங்களூரு பையப்பனஹள்ளியை சேர்ந்தவர் கேசவ்தக். தொழில் அதிபரான இவர். கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள் என்று கூறி பெண் உள்பட 4 பேர் வந்து அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கேசவ்தக்கிடம் உங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்று மிரட்டினர்.

அதற்கு கேசவ்தக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர்கள், கேசவ்தக்கை இந்திராநகர் பகுதிக்கு காரில் கடத்தி சென்று தாக்கினர். பின்னர் அவரது நண்பர் ரோஷன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் ரூ.3 கோடி எடுத்துவரும்படி மிரட்டினர். இதை கேட்ட ரோஷன், ரூ.1½ கோடியை எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கிய கும்பல் கேசவை கீழே இறக்கிவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

இந்தநிலையில் கும்பல் மீது சந்தேகம் அடைந்த கேசவ்தக், ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் தன்னை ஏமாற்றியதை அறிந்த கேசவ்தக், இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகளான சோனாலி சஹாயி, மனோஜ் சைனி, அபிஷேக், நாகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வாடகை காரில் சென்றதும். காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கேசவ்தக் வீட்டிற்கு சென்றதும். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

சுமார் 15 கிலோமீட்டர் சாலையோரம் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி சோதனை செய்த போது அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 50 காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory