» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

திங்கள் 9, செப்டம்பர் 2024 12:26:09 PM (IST)

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில், மேற்கு வங்க சுகாதாரத் துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை இன்று சமர்ப்பித்தது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில், காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.

முன்னதாக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மருத்துவர் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கொல்கத்தா காவல்துறையின்மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்திருந்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

பாலியல் கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அந்த அறிக்கையில், பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து, மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக இதுவரை 23 நோயாளிகள் பலியாகியிருக்கிறார்கள் என்று மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நிலையை அறிய சிபிஐ மற்றும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory