» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு: மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

செவ்வாய் 23, ஜூலை 2024 12:36:55 PM (IST)

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறையும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

2024- 25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அறக்கட்டளைக்கு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்படும்.
  • குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய கால மூலதன ஆதாய வரி.
  • வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைபு. இதுவரை 40 சதவீதமாக இருந்த வரி இனி 34 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
  • ஆன்லைன் வர்த்தகத்துக்கான வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
  • டிடிஎஸ் தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது.
  • தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறையும்.
  • பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைப்பு.
  • புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் மேலும் மூன்று மருந்துகளின் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மருத்துவ உபகரணங்கள் மற்றம் சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும்.
  • 2024 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
  • வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்
  • நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின் நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • காசி விஸ்வநாதர் கோயில், உலகத்தரத்தில மேம்படுத்தப்படும்.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.
  • தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
  • குறு, சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
  • தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்படும்.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
  • மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறையினருடன் இணைந்து பெண்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
  • புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
  • உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும்.
  • மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும்.
  • 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.
  • இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • உற்பத்தி துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
  • முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory