» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தானை ஊழலில் முதலிடத்தில் கொண்டு வந்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
ஞாயிறு 19, நவம்பர் 2023 9:08:38 AM (IST)
ராஜஸ்தானை ஊழல் மற்றும் கலவரத்தில் முதலிடத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்து விட்டதாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தியா ஒருபுறம் உலகின் ஒரு தலைவராக உருவெடுத்து வருகிறது. மறுபுறம், ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். ராஜஸ்தானை ஊழல், கலவரம் மற்றும் குற்றங்களில் முதலிடத்துக்கு காங்கிரஸ் கொண்டு வந்து விட்டது. தனது திருப்திபடுத்தும் கொள்கைகளால் சமூக விரோதிகளை சுதந்திரமாக விட்டு இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அங்கெல்லாம் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், கலவரக்காரர்கள் அனைவரும் சுதந்திரமாக விடப்படுகின்றனர். திருப்திபடுத்தும் கொள்கைதான் காங்கிரசுக்கு எல்லாமே. அதற்காக உங்கள் உயிரை பணயம் வைப்பது உள்பட எந்த எல்லைக்கும் காங்கிரஸ் செல்லும்.
காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் பெண்கள் மற்றும் தலித் பிரிவினருக்கு எதிராக அதிகபட்ச குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களின் நம்பிக்கையை காங்கிரஸ் சிதைத்து இருக்கிறது.ஹோலி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி என எந்த பண்டிகையாக இருந்தாலும், நீங்கள் அவற்றை அமைதியாக கொண்டாட முடியாது. கலவரம், கல்வீச்சு, ஊரடங்கு போன்றவைதான் ராஜஸ்தானில் நீடித்தது.
பெண்கள் போலியான கற்பழிப்பு வழக்குகள் போடுவதாக முதல்-மந்திரி கூறுகிறார். அவரால் பெண்களை பாதுகாக்க முடியுமா? அப்படிப்பட்ட முதல்-மந்திரிக்கு ஒரு நிமிடம் கூட நாற்காலியில் இருக்க உரிமை உண்டா?அதனால்தான் மேஜிக் நிபுணர் (முதல்-மந்திரி அசோக் கெலாட்) வாக்குகளை பெறமாட்டார் என ராஜஸ்தான் சொல்கிறது. தேர்தலுக்குப்பின் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி மறைந்து விடும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சில கட்சிகளுக்கு மக்கள் மனங்களை வெல்ல தெரியவில்லை: பிரதமர் மோடி
சனி 9, டிசம்பர் 2023 4:52:23 PM (IST)

ஆதித்யா தொலைநோக்கி எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!
சனி 9, டிசம்பர் 2023 11:51:58 AM (IST)

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2500 வெள்ள : முதல்வர் அறிவிப்பு!
சனி 9, டிசம்பர் 2023 10:47:05 AM (IST)

இளைஞா்கள் திடீா் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை: மத்திய அரசு
சனி 9, டிசம்பர் 2023 10:18:47 AM (IST)

ஒடிசாவில் மதுபான நிறுவனத்தில் ரூ.250 கோடி சிக்கியது: பிரதமர் மோடி கருத்து
சனி 9, டிசம்பர் 2023 8:44:28 AM (IST)

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்: பிரதமர் மோடி உறுதி
வெள்ளி 8, டிசம்பர் 2023 5:46:38 PM (IST)
