» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் திருப்பதி, கடப்பா உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

திங்கள் 2, அக்டோபர் 2023 11:49:12 AM (IST)

ஆந்திராவில்  திருப்பதி, கடப்பா, அனந்தபூர்  உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஆந்திராவில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திரா முழுவதும் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பல்வேறு இடங்களை சேர்ந்த தலைவர்களின் வீடுகள், வக்கீல்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது வீடுகள் மற்றும் அலுலகங்களின் கதவுகளை பூட்டிக்கொண்டு அங்கு இருந்தவர்களை அதிகாரிகள் வெளியே அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory