» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் - மம்தா பானர்ஜி விமர்சனம்

வெள்ளி 24, மார்ச் 2023 4:04:01 PM (IST)

நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

கந்தசாமிMar 26, 2023 - 06:36:30 PM | Posted IP 162.1*****

தமிழ் எதிலும் தமிழ் எங்கும் தமிழ்

KARNARAJ RAMANATHANMar 25, 2023 - 09:51:02 AM | Posted IP 162.1*****

Let the Law do its duty. Also contesting 2 constitutions and putting finance burden to Govt/Public also to be prohibited by LAW.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory