» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக தேர்தல்: பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

சனி 4, பிப்ரவரி 2023 12:37:49 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள  நிலையில், பேரவைத் தோ்தலை முழுவீச்சில் எதிா்கொள்ள ஆளும் பாஜக முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்கள் சந்தித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக கட்சியின் மூத்த அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை அறிவித்துள்ளார். கட்சியின் மூத்த அமைப்பாளரான பிரதான், கடந்த காலங்களில் பல தேர்தல்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரதான், ஒரு திறமையான அரசியல்வாதி, அவர் முக்கியமான தென் மாநிலங்களில் பாஜக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்பதற்காக உள்ளூர்நிலைகளில் உள்ள உள்கட்சி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வேளையில் மாநில அமைப்பை வலுப்படுத்தும் செயலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory