» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டிவி, செல்போன் விலை குறைய வாய்ப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 3:02:37 PM (IST)
2023 - 24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு, வரி விலக்கு, வரி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில், எந்தெந்த பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என்ற விவரங்களை அறியலாம்.
- ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பு.
- முதலீட்டுப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
- கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.
- லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும்.
- ரசாயன பொருள்களுக்கான வரி குறையும்.
- இறால் உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும்.
- செல்போன் உதிரிபாக இறக்குமதிக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- டிவி பேனல்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் டிவி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது: அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:09:40 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து 29-ந்தேதி போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 3:16:01 PM (IST)

போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது: ராகுல்காந்தி
செவ்வாய் 21, மார்ச் 2023 10:21:18 AM (IST)

ராமர் பாலம் வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி முறையீடு!
செவ்வாய் 21, மார்ச் 2023 10:17:58 AM (IST)

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாள் காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, மார்ச் 2023 5:01:41 PM (IST)

ராகுல் காந்தி வீட்டில் டெல்லி போலீசார் திடீர் விசாரணை : காங். தொண்டர்கள் திரண்டனர்!
ஞாயிறு 19, மார்ச் 2023 8:01:40 PM (IST)
