» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரை 7பேர் குழு விசாரணை: போராட்டம் வாபஸ்!

சனி 21, ஜனவரி 2023 11:51:36 AM (IST)



மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் புதன்கிழமை குற்றம்சாட்டினாா். 

பிரிஜ் பூஷனுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பஜ்ரங் புனியா கூறுகையில், தலைவா் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். சா்வாதிகாரமாக செயல்படும் அவா் நீக்கப்படும் வரை சா்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்றாா். 

இதனிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கம், மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க 7 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக உறுதியளித்தது. அந்த குழுவில் மேரிகோம்,, டோலா பேனர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் டுட் மற்றும் சஹ்தேவ் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த குழு நான்கு வாரங்களாக விசாரணையை மேற்கொள்ளும் என தெரிகிறது.

மல்யுத்த வீரர் பஜ்ராங் புனியா மேலும் கூறியதாவது, 'மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவருக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கிறோம். இதையடுத்து எங்களது போராட்டத்தினை வாபஸ் கொள்கிறோம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory