» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒடிசாவில் 253 ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா அலுமினிய பூங்கா: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
வியாழன் 1, டிசம்பர் 2022 3:28:52 PM (IST)

ஒடிசாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வேதாந்தா லிமிடெட் அலுமினிய பூங்காவிற்கு ஒடிசா முதல்வர் நவீன பட்நாயக் அடிக்கல் நாட்டினார்.
ஒடிசா மாநிலம், ஜார்சுகுடாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அனுமினிய பூங்காவிற்கு மேக் இன் ஒடிசா 2022 மாநாட்டில் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் முன்னிலையில் முதல்வர் நவீன பட்நாயக் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அகர்வால், வேதாந்தா அலுமினிய பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய உலோக பூங்காக்களில் ஒன்றாக இருக்கும். இந்த திட்டம் வேதாந்தா அலுமினியம் மற்றும் ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.
ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் அலுமினியம் உருக்காலை, ஆண்டுக்கு 1.75 மில்லியன் டன்கள் கொள்ளளவு கொண்ட உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, வேதாந்தா 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து 5 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதார வாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்கியுள்ளது. இப்போது வேதாந்தா அலுமினியப் பூங்கா, ஒடிசாவுக்கு அதிக மதிப்பைக் கூட்டி, மாநிலத்தில் தொழில் மயமாக்கலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் 'கிளினிக்' நடத்த தடை: மாநில அரசுக்கு பரிந்துரை!
சனி 4, பிப்ரவரி 2023 5:28:29 PM (IST)

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
சனி 4, பிப்ரவரி 2023 3:47:20 PM (IST)

கர்நாடக தேர்தல்: பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!
சனி 4, பிப்ரவரி 2023 12:37:49 PM (IST)

உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சனி 4, பிப்ரவரி 2023 11:54:11 AM (IST)

கோவிலுக்கு முன்னால் மதுக்கடை : பா.ஜ.க. அரசுக்கு எதிராக உமா பாரதி நூதன போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 10:22:17 AM (IST)
_1675421098.jpg)
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:15:04 PM (IST)
