» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காரில் இருந்து இறங்க மறுத்த ஒய்.எஸ்.ஷர்மிளா! கிரேன் மூலம் காரை தூக்கிய காவல்துறை!!

செவ்வாய் 29, நவம்பர் 2022 5:23:24 PM (IST)தெலங்கானா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட  ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளாவை காவல்துறையினர் காரோடு தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திர சேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணியில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் வீட்டின் முன்பாக சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார் ஒய்.எஸ்.ஷர்மிளா. அவரது கட்சியினருடன் காரில் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வெளியில் வரச் சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், அவரோ காரை விட்டு அவர் இறங்கவும் இல்லை, அங்கிருந்து வெளியில் வரவும் இல்லை. அங்கிருந்து செல்ல காவல்துறை வலியுறுத்தியும் அவர் தொடர்ந்து மறுத்த நிலையில், காவல்துறையினர் கிரேன் கொண்டு காரை அகற்றினர். அப்போதும் ஷர்மிளா காரினுள் இருந்துள்ளார். இதில் காரின் கண்ணாடி சேதமடைந்தது. 


மக்கள் கருத்து

ஆமாம் லNov 29, 2022 - 07:48:49 PM | Posted IP 162.1*****

காருக்குள்ளே ஆம்பிளை யாக இருந்தால் அடித்து இழுத்து போடுவார்கள் , பெண்கள் என்றால் படுத்தே விட்டார்கள். என்னடா இது ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory