» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 29, செப்டம்பர் 2022 12:29:02 PM (IST)

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கருக்கலைப்பு உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே என்ற நிலையை மாற்றுவது அவசியம். ஆனால் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியதாக உள்ளது. கருக்கலைப்பு உரிமையை பொறுத்தவரை, திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்னும் வேறுபாடு இல்லை.  

உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை ஒழங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது


மக்கள் கருத்து

sankarSep 30, 2022 - 01:33:45 PM | Posted IP 162.1*****

suthanthiram

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory