» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன் 29, செப்டம்பர் 2022 11:43:06 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். அவர்கள் கூறியதாவது: விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஏற்கனவே அகவிலைப்படி 34 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால், அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். சிவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும். 

மேலும், புதுடெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி ஆகிய ரெயில் நிலையங்களை மறுமேம்பாடு செய்வது தொடர்பான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது. இதன்மூலம் 34744 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவம் மேம்படும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory