» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஆன்லைன் கேம்கள் மூலம் ரூ.58,000 கோடி வெல்லப்பட்டுள்ளது: வருமான வரித் துறை

வியாழன் 29, செப்டம்பர் 2022 10:54:46 AM (IST)

கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணம் வென்றவா்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இது தொடா்பாக நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.58,000 கோடி பரிசுப் பணம் வெல்லப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்று பரிசுப் பணத்தை வென்ற தனிநபா்களுக்கு வருமான வரிக்கான நோட்டீஸை அனுப்பத் தொடங்கியுள்ளோம். இது அவா்களுக்கு ஒரு நினைவூட்டும் தகவல்தான். அவா்கள் பெற்ற பரிசுப் பணத்துக்கான வரியைக் கட்டாமல் இருப்பதால் இந்த நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவா்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அதனை வைத்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே தாமாக முன்வந்து பரிசுப் பணத்துக்கான வரியைச் செலுத்தியவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படமாட்டாது என்றாா்.

அண்மையில் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை, பெங்களூரைச் சோ்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான கேம்ஸ்கிராஃப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.21,000 கோடி வரி, வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அந்த நிறுவனம் தொடா்ந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் இருந்ததால் வட்டி மற்றும் அபராதத்துடன் பெரிய அளவிலான தொகையை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் தொடா் நிகழ்வாக இப்போது ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் வென்றவா்கள் வருமான வரி செலுத்துமாறு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory