» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்தார்!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 4:56:45 PM (IST)



காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய  குலாம் நபி ஆசாத், தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர்,  திடீரென ஆகஸ்ட் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். 

இந்நிலையில் குலாம் நபி ஆசாத் நேற்று தனது புதிய கட்சியை தொடங்கினார். ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ என்று தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், ‘‘எனது கட்சியின் பெயர், ஜனநாயகம், பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தை குறிக்கின்றது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. இது வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜம்முவில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதில் எனது கட்சி கவனம் செலுத்தும்’’ என்றார்.


மக்கள் கருத்து

truthSep 28, 2022 - 08:42:11 AM | Posted IP 162.1*****

just a useless guy milking the congress party for a long time.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory