» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிஹாரில் திடீர் ஆட்சி மாற்றம் : பாஜக கூட்டணி முறிவு; காங்கிரசுடன் கைகோர்க்கும் நிதிஷ்..!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 4:02:21 PM (IST)

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - பாஜக கூட்டணி முறிந்தது.  முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பகு சௌஹானிடம் அளித்தார். 

பிஹார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பாட்னாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ஜேடியு - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார், 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் இன்று மாலை ஆளுநரை சந்திக்கவுள்ளார். புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஆட்சி மாற்றம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் துணைத் தலைவர் சிவானந்த் திவாரி நேற்று கூறும்போது, "பாஜகவை எதிர்த்து போரிடுவதில் ஆர்ஜேடி உறுதியாக உள்ளது. இந்தப் போரில் இணைவது என நிதிஷ் குமார் முடிவு செய்தால், அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்” என்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory