» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தான் படுகொலை சம்பவம் : என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவு

புதன் 29, ஜூன் 2022 6:06:26 PM (IST)

ராஜஸ்தான் மாநிலத்தில் தையல் தொழிலாளி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது 

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் மால்டா நகரில், ஜவுளிக்கடைக்குள் புகுந்து வாலிபர் ஒருவரை வலுக்கட்டாயமாக கும்பல் இழுத்துச் சென்றது. இதையடுத்து பொது இடத்தில் வைத்து அந்த வாலிபர் தலையை துண்டித்தனர். இந்த காட்சிகளை மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கன்னையா லால் என்றும், அப்பகுதி ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு கருத்து வெளியிட்டதால், தலை துண்டிக்கப் பட்டதும் தெரியவந்தது.

மேலும் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என வீடியோவில் கொலையாளிகள் எச்சரித்து இருந்தனர். இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதற்கு பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து

இந்தியன்Jun 29, 2022 - 10:31:48 PM | Posted IP 162.1*****

அந்த இரண்டு மதவாத பாகிஸ்தான் நாய்களை தூக்கில் போடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory