» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு ஜூலை 1 முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு

புதன் 29, ஜூன் 2022 8:23:55 AM (IST)

ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல்வேறு தடைகள் மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும்  பயன்பாடு ஆகியவை ஜூலை 1, 2022 முதல் தடை செய்யப்படும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது.

பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதணிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கண்ணாடிகள், பிளாஸ்டிக் அல்லது பிவிசி 100 மைக்ரானுக்கு குறைவான பேனர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ், போர்க்ஸ், கத்திகள், ஸ்ட்ராக்கள், கட்லரி மற்றும் இனிப்புப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளில் சுற்றப்படும் பிளாஸ்டிக் பிலிம்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

nbsegkfjsdJun 29, 2022 - 09:41:41 AM | Posted IP 162.1*****

heard many times... bullshit news

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory