» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் மோசமாகிறது: ப.சிதம்பரம்

சனி 25, ஜூன் 2022 10:57:09 AM (IST)

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிதிப்பற்றாக்குறை தொடா்ந்து அதிகரிக்கு வருகிறது. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடா்ந்து வெளியேறி வருகின்றன. இதன் மூலம் நமக்கு என்ன தெரியவருகிறது? இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது என்றா கூறமுடியும்?

நாட்டின் பொருளாதார நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு கையாண்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், தெளிவற்ற முடிவுகளுமே முக்கியக் காரணங்களாக உள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எந்த அளவுக்குக் குறைவாக வைப்பது என்பது தொடா்பான இலக்கை அரசு அவ்வப்போது மாற்றி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து

JAIHINDJun 27, 2022 - 04:41:24 PM | Posted IP 162.1*****

நீங்கள் எல்லாம் பேசலாமா. பதவியில் இருக்கும்போது எவ்வளவு சம்பாதித்தீர்கள்...இன்னும் பதவி ஆசை விடவில்லை. உங்கள் ஆட்சி இல்லாததால்தான் இன்று நமது நாடு இவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளது. நீங்கள் ஆட்சியில் இல்லாததால்தான் இந்தியாவில் பொருளாதாரம் மிக சிறப்பாக உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory