» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் 3 காவலர்கள் சுட்டுக் கொலை: வேட்டைக்காரர்கள் வெறிச்செயல்!

சனி 14, மே 2022 5:35:40 PM (IST)

மத்தியப் பிரதேசத்தில் வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்கள் உயிரிழந்தனர்.. 

மத்தியப் பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அரியவகை மான்களை வேட்டையாடுவதற்காக வேட்டைக்காரர்கள் முகாமிட்டுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு காவல் துறையினர் இன்று அதிகாலை விரைந்தனர். அப்போது வேட்டைக்காரர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டனர்.

இதற்கு காவலர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பின்னர் வேட்டைக்காரர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துவிட்டனர். இந்த சம்பவத்தில் 3 காவலர்கள் மற்றும் வேட்டைக்காரர் ஒருவர் பலியாகினர். மேலும் காவல்துறையினரின் வாகன ஓட்டுநரும் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து பல மான்களின் உடல்கள் மற்றும் மயில் பாகங்களை காவல்துறையின்ர் மீட்டுள்ளனர்.

இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். வேட்டைக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்கள் பலியான சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory