» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமித் ஷா குறித்த சர்ச்சை கருத்து:ராகுல் காந்திக்கு எதிரான பிடிவாரண்டுக்கு உயர்நீதிமன்றம் தடை!
வெள்ளி 13, மே 2022 4:33:57 PM (IST)
அமித் ஷா குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், ராகுல் காந்திக்கு எதிரான பிடிவாரண்டுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு எதிராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது. ‘கொலைக் குற்றவாளியை பாஜக தலைவராக்கலாம்; ஆனால் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இவ்வாறு செய்யாது’ என்று பேசினார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளூர் தலைவர் பிரதாப் குமார் என்பவர் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.திவேதி விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவில், ‘ராகுல் காந்தி மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கீழமை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் புகார்தாரர் பிரதாப்குமாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அரசிடம் இருந்தும் பதில் கோரியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜஸ்தான் படுகொலை சம்பவம் : என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவு
புதன் 29, ஜூன் 2022 6:06:26 PM (IST)

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு ஜூலை 1 முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு
புதன் 29, ஜூன் 2022 8:23:55 AM (IST)

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்!
செவ்வாய் 28, ஜூன் 2022 5:47:50 PM (IST)

மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; 12 பேர் மீட்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 11:05:28 AM (IST)

குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
செவ்வாய் 28, ஜூன் 2022 8:43:32 AM (IST)

ஜெர்மனியில் மோடி பேசிய தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்
திங்கள் 27, ஜூன் 2022 5:25:42 PM (IST)
