» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பிரெஞ்சு ஓபனில் அனுமதி: ஜோக்கோவிச்சுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

செவ்வாய் 18, ஜனவரி 2022 3:08:55 PM (IST)

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியம் என்று நோவக் ஜோக்கோவிச்சுக்கு பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதலாவதான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்க செர்பிய வீரரும், தரவரிசையில் நம்பர் ஒன் வீரருமான ஜோக்கோவிச் சென்றார். ஆனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்ட ஜோக்கோவிச், தடுப்பூசி செலுத்தவில்லை.

ஆனால், ஆஸ்திரேலிய அரசின் விதிமுறைப்படி கிராண்ட்ஸ்லாம் ஓபன் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதாகும். தடுப்பூசி செலுத்தாமல் நாட்டுக்குள் வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும். ஆனால், ஜோக்கோவிச் தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்து சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியது.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோக்கோவிச் ஆஸ்திரேலியன் ஓபனில் பங்கேற்றால் 21-வது பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைப்பார். ஆனால், தடுப்பூசி சர்ச்சையால் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக பிரான்ஸில் 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பங்கேற்க அனுமதியில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "பிரான்ஸ் நாட்டின் தடுப்பூசி சட்டத்தின்படி பிரெஞ்சு ஓபனில் பங்கேற்போர், பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாது. அதுமட்டுமல்லாமல், சட்டத்தின்படி, பொது இடங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் செல்லும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை.

ஆதலால், மே மாதம் நடக்கும் பிரெஞ்சு ஓபனிலும் வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory