» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு விளக்கம்
திங்கள் 17, ஜனவரி 2022 3:10:28 PM (IST)
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மேற்கு வங்காளத்தின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது : ராகுல் காந்தி பேச்சு!
திங்கள் 16, மே 2022 10:46:41 AM (IST)

மத்தியப் பிரதேசத்தில் 3 காவலர்கள் சுட்டுக் கொலை: வேட்டைக்காரர்கள் வெறிச்செயல்!
சனி 14, மே 2022 5:35:40 PM (IST)

கோதுமை ஏற்றுமதிக்கு தடை: விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!
சனி 14, மே 2022 3:47:34 PM (IST)

டெல்லியில் 4 மாடி வணிக கட்டிடத்தில் தீவிபத்து: 27 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
சனி 14, மே 2022 12:15:06 PM (IST)

வீட்டின் தனி அறையில் 22 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்- பெற்றோர் மீது வழக்கு!
சனி 14, மே 2022 11:40:12 AM (IST)

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு திடீர் உத்தரவு
சனி 14, மே 2022 10:22:52 AM (IST)
