» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் ஜன.14ம் தேதி பொங்கல் விடுமுறை: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

வியாழன் 13, ஜனவரி 2022 5:32:53 PM (IST)

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் நாளை(ஜன.14) பொங்கல் விடுமுறையை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தம்திட்டா, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(ஜன.14) விடுமுறை அளிப்பதாக கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்  கடிதத்தில், ‘தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளத்தின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory