» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் விவகாரம்: ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

செவ்வாய் 26, அக்டோபர் 2021 4:39:39 PM (IST)

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவானது 86,600 பேரிடமிருந்து கருத்துகளை பெற்றும், அரசிடமிருந்து புள்ளி விவரங்களைப் பெற்றும் ஓர் அறிக்கையை தயாரித்தது.
 
இதற்கிடையே, தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அதாவது நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  "நீட் ஆய்வுக்குழு செல்லும்”  எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழு நியமன உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory